வெட்சி ஆய்விதழ் - புதிய இதழ் வெளியீடு
திருக்குறள் - 355

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

VETCHI : A Multidisciplinary Research Journal of Tamil Studies

மின்னூடக வெளியில் தமிழின் பரிமாணங்கள், பல்புல அறிவுகள் ஆய்வுலகிற்குத் திசைவெளியாக அமையும்.

வெட்சி : தமிழியல் திரட்சி

வெட்சி 2015 ஆம் ஆண்டு அச்சிதழாகத் தொடங்கப்பட்டு படைப்பிலக்கியத்திற்கும் ஆய்வுகளுக்குமான களமாக இயங்கி வந்தது. பெருந்தொற்றுக்குப் பிறகான சூழலில் ஆய்வுக்கு முதன்மையளிக்கும் வகையில் மதிப்பீட்டு ஆய்விதழாக (Peer Reviewed Journal) இணையவெளியில் 2026 முதல் வெளிவருகிறது.

கல்விப்புலத்திற்குள்ளும் வெளியிலும் நிகழும் ஆய்வுகள் பல்துறைநோக்குடன் செய்யப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இயங்குபவர்களை உள்ளடக்கித் தமிழின் பல்வேறு பரிமாணங்களைக் கண்டடைந்து இதழில் தொடர்ச்சியான உரையாடல்களை முன்வைப்பது, அதுசார்ந்த களச்செயல்பாடுகளை வடிவமைப்பது என்று திட்டமிடல்கள் அமையும்.

இலக்கியம், வாழ்க்கை, கலை, வரலாறு, சமூகம் என்று வேறுவேறாக இல்லாமல் எல்லாம் இணைகிற புள்ளிகளைக் கண்டறிந்து புலங்களின் அறிவுகளை ஒருமுகப்படுத்திக் காண்பதும் இன்று நாம் அடைகின்ற நெருக்கடிகளை முதன்மைப்படுத்திய உரையாடல்களை முன்வைப்பதும் தலையாய இயக்கமாக அமையும்.

இதழின் இலட்சினை வரலாறு

பன்மியச்சூழல் முதன்மைவாய்ந்த நீலமலையில் வாழும் ஆலுக்குறுமரின் பழங்குடி ஓவியங்கள் பல்லாயிர ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்தவை. திணைமரபின் பின்னணியிலான ஆலுக்குறுமர் ஓவியங்கள் இயற்கைச் சாந்துகளிலிருந்து வரையப் பெறுபவை. ஆலுக்குறுமரின் மலைவாழ்வியலைக் காட்டும் இவ்ஓவியங்கள் வரைவதில் கோழித்துரை திரு.கணேசன் குறிப்பிடத்தக்கவர். சூழல் மையத்தைக் காட்டும் தன்மையிலான ஓவியப்பின்னணியில் வெட்சி இதழுக்கான இலட்சினையை வடிவமைக்க விருப்பம்கொண்டு அணுகியபொழுது மரபார்ந்த ஆலுக்குறுமர் குழுநடனத்தை வரைந்துகொடுத்தார் திரு.கணேசன். காலநிலை மாற்றம், பன்மைத்துவம், நுகர்விய எதிர்ப்பு, அதிகாரக் கருத்தியலுக்கு மாற்று எனும் நிலையில் சூழல் முதன்மைக் கோட்பாட்டை வெளிக்காட்டும் பன்மைத்துவச் சிந்தனையின் உருவாய் நவீன வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்துக் கொடுத்தவர் தமிழி அருள்.

பல்துறைப் பார்வைகளுடன் ஊடாடல்

காலந்தோறும் தன்னைப் புதுப்பிக்கும் தமிழ்

நவீனத் தொழில்நுட்பம்

வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஏற்பப் பல்வேறு புலஅறிவுகளைக் கையாள்வதும் இயற்கைச்சூழலுடன் இணக்கமான வாழ்முறைகளை முன்வைக்கக்கூடிய ஆக்கங்களை வெளியிடுதல்.

ஆளுமைகள் ஆவணப்படுத்தல்

ஆய்வுசார்ந்த வெளிகளில் தவிர்க்க இயலாத ஆளுமைகளின் பங்களிப்புகளைப் பல்வேறு தளங்களில் ஆவணப்படுத்தலும் அவர்களின் பங்களிப்பு சார்ந்த உரையாடல்களை முன்வைத்தல்.

ஒப்பாய்வு & மொழிபெயர்ப்பு

மொழி, இனம், பண்பாடு, நாடு, சூழல் என்ற எவ்வித வேறுபாடுகளின்றி உயிர்மநேயத்தால் பிணைக்கும் ஒப்பாய்வுகளையும் மொழிபெயர்ப்புகளையும் வளர்த்தெடுத்தல்.

ஆண்டிற்கு இருமுறை வெளியீடு

ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமின்றி ஆய்வுநூல் மீதான மதிப்புரைகள், ஆய்வுரைகள், சமூகம், இலக்கியம், கலை சார்ந்த ஆய்வறிக்கைகள், களப்பணி அறிக்கைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முதல் அரையாண்டிதழ்
கட்டுரைகள் பெறும் காலம்: ஆகஸ்ட் – அக்டோபர்
தேர்வு மற்றும் மதிப்பீட்டு அறிக்கைை: நவம்பர்
இதழ் வெளியீடு: ஜனவரி – 15
இரண்டாவது அரையாண்டிதழ்
கட்டுரைகள் பெறும் காலம்: பிப்ரவரி – ஏப்ரல்
தேர்வு மற்றும் மதிப்பீட்டு அறிக்கைை: மே
இதழ் வெளியீடு: ஜூலை – 15

கட்டுரையாக்கத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை

தேர்வுக் கொள்கை மற்றும் அசல் தன்மை

தேர்வுக்குழுவினரால் தேர்வுசெய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் துறைசார்ந்த வல்லுநரால் மதிப்பீடு செய்யப்பட்டு மின்னஞ்சல் வழியாக மதிப்புரைகள் வழங்கப்படும். ஆய்வுக்கட்டுரைகள் இதுவரை வெளியிடப் பெறாதவையாகவும் கட்டுரையாளரின் சொந்த முயற்சியில் அமைந்திருத்தல் வேண்டும்.

ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படும். தேவைப்படின் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிடப்படும்.

கருத்துத் திருட்டு, ஆய்வுத்திருட்டுகளுடன் வெளியாகும் கட்டுரைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் (AI) பெறப்பட்ட கட்டுரைத் தொகையாக்கம் அடிப்படை நிலையிலேயே நிராகரிக்கப்படும். உரிய சான்றுகள், மேற்கோள் விவரங்கள், துணையன்கள் போன்றன இடம்பெறாத கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவற்றை அளவிட உரிய மென்பொருட்களின் துணையுடன் பகுப்பாய்வுச் செய்யப்பட்டு அறிக்கைகள் அளிக்கப்படும்.

முன்னுரிமை அளிக்கப்படும் களங்கள்

பல்துறைப் பார்வைகளோடு பின்வரும் தலைப்புகளை முதன்மைப்படுத்தி எழுதப்படும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்:

  • இலக்கியம் மற்றும் கலை அணுகும் முறை
  • கோட்பாட்டாக்க முயற்சி & சமகாலப் பார்வை
  • ஆவணப்படுத்தல் & புதிய களங்கள் அறிமுகம்
  • சமூக நெருக்கடிகள் மற்றும் அதற்கான தீர்வுகள்
  • விளிம்புநிலை தொடர்பான உரையாடல்கள் & உலகப் பார்வை

மேற்கோள் மற்றும் வடிவமைப்பு முறைகள்

  • இலக்கிய கட்டுரைகள்:

    MLA 8 ஆம் பதிப்பு முறை
  • அறிவியல் கட்டுரைகள்:

    APA முறை
  • வரலாறு கட்டுரைகள்:

    Chicago முறை
  • பக்க அளவு:

    அதிகபட்சம் 25 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (A4 அளவு, 1.15 பக்க இடைவெளி).
  • தமிழ் எழுத்துரு:

    Arial Unicode MS (அளவு: 12)
  • ஆங்கில எழுத்துரு:

    Times New Roman (அளவு: 11)
  • துணைக்கருவிகள்:

    கட்டுரைக்கு உறுதுணைபுரியும் ஒளிப்படங்கள், அட்டவணைகள், பின்னிணைப்புகள் யாவும் மேற்கண்ட ஆய்வு முறைகளின் (MLA/APA/Chicago) அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும்.

கட்டுரை அமைப்பு மற்றும் ஆசிரியர் விவரங்கள்

  • ஆய்வுச்சுருக்கம் (Abstract):

    குறிச்சொற்களுடன் (Keywords) ஒரு பக்கங்களுக்கு மிகாமல் இடம்பெற வேண்டும்.
  • ஆசிரியர் விவரம்:

    கட்டுரையாளர் பெயர், Google Scholar ID, ORC ID, பொறுப்பு/ நிலை, பணியிட/ பொறுப்பு வகிக்கும் விவரங்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியன கட்டுரையின் தலைப்பை அடுத்து இடம்பெற வேண்டும்.
  • கூட்டுமுயற்சி:

    கூட்டுமுயற்சியோடு எழுதப்படும் கட்டுரைகள் முதன்மை மற்றும் துணைமை ஆசிரியர்களின் விவரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.
  • கட்டுரையின் இறுதிப் பகுதி:

    கட்டுரையின் இறுதியில் ஒப்புதல் சார்ந்த தகவல்கள், நன்றி நவில்தல், கருத்து மாறுபாடுகள், மற்றும் நிதி உதவி சார்ந்த தகவல்கள் அமைய வேண்டும்.

சமீபத்திய ஆய்வுக் கட்டுரைகள்

கீழே உள்ள கட்டுரைகள் புதிய பக்கத்தில் முழுமையாகத் திறக்கும்

வெட்சி ஆய்விதழுடன் இணையுங்கள்

வெட்சி ஆய்விதழ் தமிழியல் ஆய்வுக்களத்தில் எந்த நிதியுதவியுமின்றி இயங்கும் அமைப்பாகும். இக்களத்தில் ஆய்வுத்தேடலுடன் இயங்குபவர்களையும் களப்பணியாளர்களையும் உள்ளடக்கி ஆய்விதழைக் கொண்டு செல்ல விழைகிறோம்.

  • வெட்சி ஆய்விதழில் தன்னார்வலராக இணைவதற்குக் கல்விப்புலம் மற்றும் ஆய்வுநிறுவனங்களில் ஆய்வு செய்பவராகவும் ஆய்வு முன்அனுபவங்கள் கொண்டபவராகவும் இருத்தல் வேண்டும்.
  • வெட்சி நூலரங்குகள், ஆய்வுக் கூடுகைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் இவற்றில் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவும் திட்டமிடல்கள் உள்ளிட்ட பங்களிப்புகளைச் செய்யவும்
  • வருங்காலங்களில் ஆசிரியர் குழுவில் துறைசார்ந்த இதழ்களை வடிவமைக்கவும் வெளியிடவும் மற்றும் நூலாக்கம், தொகுப்பாக்கப் பணிகளில் ஈடுபடவும் தன்னார்வலர்களின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி: கல்விப்புலம்/ஆய்வு நிறுவனங்களில் ஆய்வு செய்பவராக இருத்தல் வேண்டும்.

நிர்வாக ஆசிரியர் குழு

முனைவர் நி.கனகராசு

முனைவர் க.வினோதா

திரு.த.செல்வராஜ்